நான்  அஞ்சா நெஞ்சன் அப்படி தான் கட்சியை எதிர்ப்பேன் என்று நீங்கள் சொன்னால்  தீபா மாதிரி காமெடி பீஸ் ஆயிடுவிங்க என திமுக தொண்டர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  அழகிரி அவர்கள் பிரிந்து சென்றால் அதிமுகவின் தினகரன் ஆகலாம் என்று அவருக்கு எண்ணம் இருக்கலாம். ஆனால் தினகரனின் உண்மையான நிலைமை என்னவென்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக தெரிய வரும். RK நகரில் என்ன நடந்து என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். அதையே 40 தொகுதியிலும் செய்து விடலாம் என்று அவர் பகல் கனவு காண்பது போன்று நீங்களும் கனவு கண்டால் அது பொய்த்து தான் போகும். 

தினகரனை விடுங்கள் தீபாவின் நிலைமை தான் உங்களுக்கு வரும். மீடியாவிற்கு நீங்கள் ஒரு விவாத பொருளாக மாற நேரிடும். மீம்ஸ் போடுவர்களுக்கு ஒரு நல்ல தீனியாக இருப்பீர்கள். 
"மீடியாவின் டார்லிங்" ஆக நீங்கள் மாற நேரிடும். அதே மீடியா சில நாட்கள சென்று உங்களை சீண்ட கூட மாட்டார்கள். 

தலைவர் கலைஞர் அவர்கள் இறந்த உடன் மெரீனாவில் இடம் இல்லை என்ற உடன் தொண்டர்கள் மத்தியில் ஒரு கோபமும், வேகமும் வந்ததது. அந்த வேகமும், கோபமும் தான் தலைவர் நமக்காக விட்டு சென்ற பொக்கிஷம். அவர்கள் தலைவர் இறந்தவுடன் மெரீனாவில் இடம் கொடுத்து இருந்தால் கூட இந்த எழுச்சி தொண்டர்கள் மத்தியில் வந்து இருக்காது. இது நமக்கு கிடைத்த வரபிராதம். அதை தேர்தலின் போது தொண்டர்கள் சரியாக பயன்படுத்த தயாராக உள்ளனர். அதை உங்களுடைய சுயலாபத்திற்காக வீணாக்கிவிடாதீர்கள். 

அதிமுகவில் OPS கூட கட்சியை விட்டு சென்று திரும்பி வந்ததிகற்கு ஒரே காரணம் தான். அதிமுகவிற்கு OPS தேவைபடவில்லை. ஆனால் OPS என்னும் தனி மனிதனுக்கு அதிமுக என்னும் கட்சி தேவைபட்டது. 
திமுகவிலும் அந்த நிலைமை உங்களுக்கு வரும். உதயசூரியனில் நிற்கும் ஒரு தனி மனிதர்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் அவர்களை தான் மதிப்பார்கள். அழகிரி என்ற தனிமனிதனுக்கு தேர்தலில் எந்த மதிப்பும் இல்லை என்பது தான் உண்மை. இது திமுகவில் எல்லோர்க்கும் பொருந்தும். நீங்கள் என்னவென்றால் தனியாக நின்று சாதித்து விடலாம் என்று தினகரனை போன்று தப்பான கணக்கு போட்டு உள்ளீர்கள். அப்படி என்றால் கட்சியில் இல்லாத இந்த சில வருடங்களில் உங்களின் செல்வாக்கு கூடி தானே இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பது தானே உண்மை. 

ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த கட்சி பிஜேபியின் கையில் என்னபாடு பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா? 
அதையே தான் உங்களை வைத்து இப்போது செய்ய பார்கின்றனர். உங்களை மட்டும் அதில் நன்றாக நடுத்துவார்கள் என்று நினைத்து அவர்களுடன் சேர்ந்து திமுகவை எதிர்த்தால் பின்னர் தலைவர் கலைஞரின் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது. 

பிஜேபி இப்போது தமிழகத்துக்குள் வருவதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யும். அதன் விழுதுகள் தான் ரஜினியும், கமலும். உங்களை ரஜினியுடன் சேர்த்து திமுகவை எதிர்த்து வேடிக்கை பார்க்க நினைக்கிறது அந்த கூட்டம். அந்த வலையில் விழுந்த EPS ku என்ன மரியாதை கிடைக்குது என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. 

இது எல்லாம் தெரிந்தும் நான் அஞ்சா நெஞ்சன் அப்படி தான் கட்சியை எதிர்ப்பேன் என்று நீங்கள் சொன்னால் மகன் என்ற பாவத்திற்காக தலைவர் கலைஞரின் ஆன்மா உங்ககளை மன்னிக்கலாம் ஆனால் ஒரு அடிப்படை தொண்டனாக உங்களுக்கு எப்போதும் மன்னிப்பு கிடையாது. 

- அடிப்படை திமுக தொண்டன்.