திமுக தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் அழகிரிதான் பதவி ஏற்பார் என அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்தி போட்டுள்ளது திமுக வட்டாரத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் மொத்தமாக அந்த தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

காலியாக அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரசாரம் முடிந்ததும்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தேன், அதே பகுதியில் தான் ஸ்டாலினும், பிரசாரம் செய்தார். அப்போது அங்கு சென்று வா மகனே சென்று வா'' என்ற பாடல் பாடியது. அது கோவலன் கதைப்பாடல். கோவலன் சென்ற பிறகு திரும்பி வரவே இல்லை, அதுபோலத்தான் தி.மு.க.,வின் கதையும். ஸ்டாலின் இனி திரும்பி வரவே முடியாது என்பதற்கு அந்த பாடலே சாட்சி எனப் பேசினார்.

தொடர்ந்துபி பேசிய அவர், தி.மு.க.,வில் நடக்கும் சில செய்திகள் சந்தேகம் தருகின்றன. கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது ஸ்டாலின் சொல்லித்தான் என திமுக வட்டாரங்களில் பேசுகின்றனர் என்று குண்டைத்தூக்கிப் போட்டார். 

கடைசியாக தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக தோல்வி அடையும் பட்சத்தில், திமுக தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் மு.க.அழகிரி தான் தலைவராக பதவி ஏற்பார் இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மதுரை திமுகவில் மட்டுமல்ல அறிவாலயத்தில் மொத்தமும் ஜெயக்குமாரின் பெட்டியே கொழுந்து விட்டு எரிகிறதாம்.