திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த  ஐந்தே நாட்களில் தனது சுயரூபத்தை வெளிபடுத்திய  அழகிரியால்  திமுக வட்டாரத்தில் பரபரப்பாகி வருகிறது. அதுவும் "கலைஞர் திமுக" என மதுரையே திருவிழா கோலம் பூண்டுள்ளது திமுக உண்மையான விசுவாசிகளை எரிச்சலடைய செய்கிறது.

ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் பொதுச் செயலாலராக வந்த சசிகலா, முதல்வாராக அடுத்த மூவ் ஆரம்பித்த சமயத்தில் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் இருந்துவிட்டு, தர்மயுத்தம் தொடங்கியதைப்போல தற்போது,  கருணாநிதி மறைவுக்கு பிறகு, செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உருவெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அழகிரி, தனது பக்கம்தான் திமுக விசுவாசிகள் உள்ளதாக கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடீர் தர்மயுத்தம் தொடங்கக் காரணம் தான் என்ன? அப்பாவால் வெளியேற்றப்பட்ட அழகிரி மீண்டும் அரசியலில் வர விருப்பம் இல்லையாம், ஆனால் மகனுக்கு மட்டுமே டிரஸ்டில் நல்ல பொறுப்பு கேட்பதாகவும், அனால் இதற்கு ஸ்டாலின் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம், சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ பதிவுடன், தற்போது புதிய கருத்தை சொல்ல விரும்பும் அரசியல் வாதியாகவும், அரசியல் களத்தில் மீண்டும் கலக்க வரும் ஹீரோ போன்ற வாசகங்கள் அடங்கிய பாடல் வரிகள்  கொண்ட இந்த விடிவை வெளியிட்டார். கருணாநிதி இறந்து இன்றுடன் நான்கு நாட்களே ஆன நிலையில் இது போன்ற வீடியோவை அழகிரி வெளியிட்டு உள்ளதால், தொண்டர்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால் கடுப்பான பேராசிரியர் அன்பழகன் உடனடியாக ஸ்டாலினை அழைத்து இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும், அழகிரி மீண்டும் திமுகவிற்குள் வந்தால் மொத்தமும் நாசமாகிவிடும் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார். 

ஸ்டாலின் - அன்பழகன் சந்திப்பு குறித்து அறிந்த அழகிரி, இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து, விசுவாசமான உடன்பிறப்புக்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள் என ஒரே ஒரு பேட்டி மூலம் அடுத்த அதிரடியை கிளப்பியுள்ளார்.    இதனையடுத்து கோபாலபுரம் சென்ற அவர் நேஷனல் மீடியாவில் நான் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சத்தினால்,  திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. திமுக தலைவர்கள் பலர் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் பேசிய அவர் திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன.  இப்போதுள்ள தலைவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள்.அவர்களை தலைவர் கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் எனக்  இந்தியாவிக்கே கேட்கும் அளவிற்கு தனது சத்தத்தை பதிவிட்டார்.

நாளை கட்சியில் செயற்குழு கூடவுள்ள நிலையில், அஞ்சா நெஞ்சன் ஆதரவாளர்கள், தென்மண்டலங்களில் அதகளம் பண்ணை வருகிறார்கள். தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக அதகளம் பண்ணியவர். இவரது ஆதவாளர்கள் "இது காலத்தின் விளையாட்டு 
 நீ கழகத்தை நிலைநாட்டு",கடமை உண்டு உனக்கு காத்திருப்போம் அதற்கு" , "கலைஞர் திமுக"  ஏன் பெயரிட்டு போஸ்டர், பேனர் என மதுரையே கலகலக்கிறது. 

கலைஞருக்குப் பிறகு கட்சியின் ஏகபோக அதிகாரம் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை சற்றேறக்குறைய கலைஞரும் தமது அந்திமக் காலங்களில் ஒருவாறாக உறுதிப்படுத்தி விட்டு தான் மறைந்திருக்கிறார்.  கருணாநிதி உயிரோடு இருந்தவரை சைலன்ட்டாக அடக்கி வாசித்த அஞ்சா நெஞ்சன் தலை மறைந்ததும் தலைகால் புரியாமல் ஆடிவருவதாக திமுக முக்கிய புள்ளிகள் கூறிவருகின்றனர்.