Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் போன்று தர்மயுத்தம் தொடங்கிய அஞ்சா நெஞ்சன்! கலைஞரிடம் ஆதங்கத்தை தெரிவித்தேன்...

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிற்கு எதிராக  ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியது போல, தற்போது, அழகிரியும் ஸ்டாலினுக்கு எதிராக தனது அரசியல் அதிரடியை தொடங்கியிருக்கிறார்.

Azhagiri start his political entry
Author
Chennai, First Published Aug 13, 2018, 11:40 AM IST

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிற்கு எதிராக  ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியது போல, தற்போது, அழகிரியும் ஸ்டாலினுக்கு எதிராக தனது அரசியல் அதிரடியை தொடங்கியிருக்கிறார்.

தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக ராஜங்கம் செய்தவர், தமிழ்நாட்டின் முன்னேற்றட்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர், தமிழ் அன்னையின் தவப்புதல்வன் என எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். ஐந்து முறை தமிழகத்தை முதல்வராக ஆட்சி செய்தவருக்கு, கடைசியில் அவர் ஆசைப்பட்டபடி அவரின் உயிருக்கு நிகரான அறிஞர் அண்ணாவின் அருகே நல்லடக்கம்  செய்யப்பட்டது.  

திமுக தலைவர் மறைந்து சரியாக ஒரு வாரம் ஆகும் நிலையில் அவரின் மூத்த மகன் முக அழகிரி இன்று மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதியில் தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுது்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓபிஎஸ் போல திடீரென்று வந்த மு.க.அழகிரி தொண்டர்கள் எனது அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிகிட்டு இருக்கேன். அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது தெரியாது உங்களுக்கு.  தமிழகத்திலுள்ள கருணாநிதியின் அத்தனை உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கமே உள்ளனர், அவர்கள் இன்றும் என்னை ஆதரித்து கொண்டுள்ளனர். ஆகவே, இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதோடு நான் நிறுத்திக்கொள்கிறேன் என்றார்.

ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் பொதுச் செயலாலராக வந்த சசிகலா, முதல்வாராக அடுத்த மூவ் ஆரம்பித்த சமயத்தில் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் இருந்துவிட்டு, தர்மயுத்தம் தொடங்கியதைப்போல தற்போது,  கருணாநிதி மறைவுக்கு பிறகு, செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உருவெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அழகிரி, தனது பக்கம்தான் திமுக விசுவாசிகள் உள்ளதாக கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios