இடைத்தேர்தல் செய்திகள் பத்திரிகைகளில் மெல்ல இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன் மு.க. அழகிரி சிலிர்த்து எழ ஆரம்பித்திருக்கிறார்.

சென்னையில் அழகிரி நடத்திய அமைதிப்பேரணி ஃப்ளாப் ஆனதும் அவரது கெத்து குறைந்தது கண்கூடான காட்சி. அதன்பின்னர் முழு அமைதி காத்த அழகிரி,இன்னொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். அது வரும் 13ம் தேதி அவருக்கு கனிந்துவரக் காத்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதிக்கு, திண்டுக்கல்லில், வரும், 13ல், புகழஞ்சலி கூட்டத்தை,  அழகிரி நடத்துகிறார். இதில், தன் பலத்தை நிரூபிப்பதன் வாயிலாக, தி.மு.க., துணை பொதுச்செயலர், ஐ.பெரியசாமிக்கு, 'செக்' வைக்க திட்டமிட்டுள்ளார்.

தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுத்த் ஸ்டாலினுக்குப் பாடம் புகட்டவும், , 'தென் மண்டலத்தில், அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை; கட்சி முழுவதும், ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது் என  கூறிவரும் ஐ.பெரியசாமிக்குசெக்' வைக்கும் வகையில், அவரது சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில், வரும், 13ல், கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்த, அழகிரி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, ஸ்டாலின் மற்றும் பெரியசாமி அதிருப்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில், 'அழகிரியின் கூட்டத்திற்கு செல்லக்கூடாது' என, அவரது ஆதரவாளர்களிடம், தொலைபேசி வழியாக, ஐ.பெரியசாமி பேசி தடுத்து வருவதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கூட்டமும் தோல்வியில் முடிந்தால் அரசியலில் நம்மள ஒருபய மதிக்கமாட்டான் என்பது அழகிரிக்குத் தெரியாதா என்ன?