மு.க.அழகிரி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக பற்றி தாம் சொல்லாத விஷயங்களை சொன்னதாக முகநூல் , வாட்ஸ் அப்பில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தாம் பேட்டி அளித்ததாக கூறி இந்த தகவலை பரப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மு.க. அழகிரி சார்பில் அவரது வழக்கறிஞர் யுவராஜ் சேகர் கடந்த 8 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் மு.க அழகிரி சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது குறித்து பேசியதாகவும் அதில் நல்லவேலை உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்து விட்டார்கள் இல்லாவிட்டால் திமுக தோற்றிருக்கும் என்று கூறியதாக ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு தாம் பேட்டி அளித்ததாக கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் போடப்பட்டுள்ளது. 

இது தவறான ஒன்று , தனது புகழுக்கும் , பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்று இது குறித்து தாம் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி அளிக்கவில்லை.

தான் ஒரு போதும் திமுகவுக்கு எதிராகவோ எனது தந்தைக்கு எதிராகவோ எப்போதும் தவறாக பேசியதில்லை. உள்நோக்கத்துடன் இது போன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது பிரிவு 469, 499, 500, 501,504 மற்றும் 505ன் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிரேன் இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.