அழகிரியின் பின்னால் பாஜக இருப்பதாகக் கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் என தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் செய்துள்ளார். திமுகவை யாரும் உடைக்க வேண்டாம், திமுகவை உடைக்க அக்கட்சியினரே காரணமாக இருப்பர் என்றும் கூறியுள்ளார். 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுகவுக்குள் அதிகார போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படியே கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பின் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில் திமுக தலைவர் கருணாநிதியிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்தேன். கலைஞரின் உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர். திமுகவுக்கு நான் வருவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அழகிரி இவ்வாறு பேசியதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திமுக செயற்குழுவில் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த மோடி அரசு முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியது அழகிரிக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது என்பது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கூறியுள்ளார். 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். திமுகவை யாரும் உடைக்க வேண்டாம், திமுகவை உடைக்க அக்கட்சியினரே காரணமாக இருப்பர் என்றும் கூறியுள்ளார்.