கொரோனாவுக்கு எதிராக லேகியம்.. சாப்பிட்ட 15 நிமிடத்தில் குணமடைந்த இளைஞர்.. ஆந்திராவில் அதிசயம்.
ஆனந்தய்யாவை வரவழைத்து மல்லா ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினார். இதையடுத்து ஆனந்தய்யாவிடம் பணிபுரியும் ஊழியர்கள், அவரது கண்ணில் மூலிகைகளால் தயார் செய்த சொட்டு மருந்தை விட்டனர். பின்னர் லேகியத்தை வாயில் வைத்தனர். இதைத் தொடர்ந்து வெரும்15 நிமிடம் கழித்து சுவாச பிரச்சனைகள் நீங்கி மல்லா ரெட்டி எழுந்து நின்றார்.
கொரோனா வைரஸ்க்கு லேகியம் மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே வைரஸ் தொற்றிலிருந்து இளைஞர் மீண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பெத்த பள்ளியை சேர்ந்தவர் மல்லா ரெட்டி,பட்டதாரியான இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல லட்சங்களை செலவழித்தும் அதிலிருந்து அவர் குணமடையவில்லை, தொடர்ந்து சுவாசப் பிரச்சினையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியம் சாப்பிட்டு பலர் உடனடியாக குணமடைவது அறிந்த மல்லா ரெட்டி அவரது தாயார் மல்லேஸ்வரி உடன் 700 கிலோமீட்டர் பயணித்து நெல்லூருக்கு வந்தார்.
ஆனால் ஆனந்தய்யா மருந்து வழங்க அரசு தடை விதித்தது. இதை அறியாமல் மல்லா ரெட்டி லேகியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நெல்லூர் வந்து ஏமாற்றமடைந்தார். இதனால் செய்வதறியாமல் பல மணி நேரம் மரத்தடியில் காத்திருந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக திடீரென மயக்கமடைந்து கீழே சரிந்தார். அப்போது அந்த வழியாக முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் ஆனந்தய்யா வழங்கி வரும் ஆயுர்வேத லேகியம் குறித்து அறிய அவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போதும் மல்லா ரெட்டி மற்றும் அவரது தாயார், ஆனந்தய்யாவின் மருந்துக்காக பல நூறு கிலோ மீட்டர் கடந்து வந்து ஏமாற்றம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பது தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ஆனந்தய்யாவை வரவழைத்து மல்லா ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறினார். இதையடுத்து ஆனந்தய்யாவிடம் பணிபுரியும் ஊழியர்கள், அவரது கண்ணில் மூலிகைகளால் தயார் செய்த சொட்டு மருந்தை விட்டனர். பின்னர் லேகியத்தை வாயில் வைத்தனர். இதைத் தொடர்ந்து வெரும்15 நிமிடம் கழித்து சுவாச பிரச்சனைகள் நீங்கி மல்லா ரெட்டி எழுந்து நின்றார்.
தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார், மேலும் கடந்த 20 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எவ்வித பயனும் இல்லாததால், ஆனந்தய்யாவிடம் நாட்டுமருந்து பெற்றுக் கொள்ள வந்தேன் என்றார். ஏழை எளிய மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து வரும் நிலையில், மாநில அரசு உடனடியாக இந்த நாட்டு மருந்தை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மல்லா ரெட்டி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் செய்தியாளரிடம் பேசுகையில், ஆனந்தய்யா தயாரித்துள்ள மருந்தைச் ஆயுஷ் அங்கீகரித்துள்ளது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஐ.சி.எம்.ஆர் இந்த மருந்தை சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளது, இந்த நாட்டுமருந்து காரணமாக எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்று ஆயுஷ் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி எம்எல்ஏக்கள் கூட இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை, எனவே முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுத்து, இந்த மருந்தை ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக, இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.