Asianet News TamilAsianet News Tamil

அயோத்தியில் மீண்டும் ‘92 பாணி கலவர ஆபத்து... ஊரைக் காலி செய்யும் இஸ்லாமிய குடும்பங்கள்


’அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை இனியும் தாமதிக்காதே’ என்ற கோஷங்களுடன், ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ayodhya Hindu groups warn of '1992 repeat'; Section 144 imposed
Author
Chennai, First Published Nov 24, 2018, 3:43 PM IST

’அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை இனியும் தாமதிக்காதே’ என்ற கோஷங்களுடன், ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ayodhya Hindu groups warn of '1992 repeat'; Section 144 imposed

இதையொட்டி பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் 1992ல் நடந்ததுபோல் மீண்டும் ஒரு பெரும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக அஞ்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் தங்கள் ஊரை தற்காலிகமாக காலிசெய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.ayodhya Hindu groups warn of '1992 repeat'; Section 144 imposed

ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா வலியுறுத்தின. பண மதிப்பு இழப்புக்கு எப்படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதே போன்று ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் உத்தரபிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வும் இந்த சர்ச்சையில் உறுதியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இதற்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்திக்கு மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளனர். இந்து அமைப்புகளின் இந்த அதிரடி பேரணியால் அயோத்தி விவகாரத்தில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

நாளைய பேரணிக்காக அயோத்தி பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரி‌ஷத் தொண்டர்கள் இன்று காலை முதலே குவியத் தொடங்கி உள்ளனர். விசுவ இந்து பரி‌ஷத் மூலம் 1 லட்சம் தொண்டர்களையும், ஆர்.எஸ்.எஸ். மூலம் 1 லட்சம் தொண்டர்களையும் அயோத்தி நோக்கி திரட்டி வருகிறார்கள். அயோத்திக்கு வரும் கரசேவகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

நாளை காலை 11 மணிக்கு அயோத்தி பக்தி மார்க்சில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு அவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யத் திட்டமிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேயுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கிறார்கள்.

ராமர் கோவில் கட்ட உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி நாளை மதியம் பேரணி தொடங்குகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பதால் அயோத்தியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அயோத்தியில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ayodhya Hindu groups warn of '1992 repeat'; Section 144 imposed

துணை நிலை ராணுவ வீரர்கள், கமாண்டோ படையினரும் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. 1992ல் நடந்த பாணியில் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ள நிலையில் மோடியின் பி.ஜே.பி. அரசு இதை மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios