Avadi Kumars car was confiscated when he came in without permission.

அனுமதியின்றி உள்ளே வந்ததால் ஆவடி குமாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணம் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் சென்னை மாநகர் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் செய்தி தொடா்பாளராக இருப்பவா் ஆவடி குமார். இவா் நேற்று ஆா்.கே. நகருக்கு பிரசாரத்திற்காக சென்றுள்ளார். 

அப்போது தனது தனது காரில் PRESS என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தினகரன் ஆதரவாளா்கள் அந்த காரை வழிமறித்து பணம் எடுத்துச் செல்லப்படுவதாக குற்றம் சாட்டினா். 

இதைதொடா்ந்து அ.தி.மு.க.வினருக்கும், டிடிவி தினகரன் தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து ஆவடி குமாரை அழைத்துச் சென்றனா். ஆனால் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்காமல் இருந்தனர். 

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். 

அப்போது, அனுமதியின்றி உள்ளே வந்ததால் ஆவடி குமாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணம் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.