ஆகஸ்ட் 3ம் தேதி அரசு பள்ளிகளில் அட்மிசன் நடைபெறும் என்கிற செய்தி காட்டு தீயாய் பரவியது.இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகளில் அட்மிசன் என்பது தவறானது தமிழக அரசு அப்படியொரு அறிக்கையை வெளியிட வில்லையென்றும் அப்படியொருதகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-இல் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் என்று  பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி முதல் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மாநிலத்தில் சில பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் ஆகஸ்ட் 3-இல் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் என்று  பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், 'ஆக.3 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது முற்றிலும் தவறான தகவல். மாணவர்சேர்க்கை நடத்துவது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆக.3 இல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.