மூன்று நீட் தற்கொலைகளை பிரபலப்படுத்திய, டிவி சேனல்கள், பத்திரிகைகள், அறிவுஜீவிகள் போதை காரணமாக இறப்பவர்களின் உண்மைகளை ஏன் மறைக்கிறார்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’சாராயம்/போதை மருந்து காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 2012 இல் 242. 2014 இல் 522. 2016 இல் 722. 2019 இல் 1042. 7 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது. பரீட்சையை போல இதை பற்றியும் அரசியல்வாதிகள் கருத்து கூறினால் நல்லது. மாட்டார்கள்.

 

அரசியல்வாதிகளை விடுங்கள். மூன்று நீட் தற்கொலைகளை பிரபலப்படுத்திய, டிவி சேனல்கள் பத்திரிகைகள் அறிவுஜீவிகள் இந்த உண்மைகளை ஏன் மறைக்கிறார்கள். பொய் செய்திகளுக்கு மகத்துவம் கொடுத்து வியாபாரம் செய்யத்தானே. இந்த பொய்களையெல்லம் தாண்டி உண்மை வெளிவர வேண்டும். இது தான் இன்றைய நிலை’’ என கூறியுள்ளார்.