ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகிறார். இவர் கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் கண்டறியப்பட்ட நாள் முதலே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 4, 2021, 3:31 PM IST