அப்போது முகமூடி அணிந்திருந்த சிலர் என்னைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க வந்தான்.

தன் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச முயற்சித்ததாக பிரபல நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தெலுங்கு, இந்தி மொழிகளில் சில படங்களில் தலைகாட்டியவர் பாயல் கோஷ். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இயக் குநர் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு பாலியல் புகாரை கூறியிருந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகார் தொடர்பாக நடிகை பாயல் கோஷ் மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்தும் புகார் அளித்தார். பிறகு அவர், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக இப்போது இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கியதாகவும் ஆசிட் வீச முயன்றதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அவர், ’’சில நாட்களுக்கு முன் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது முகமூடி அணிந்திருந்த சிலர் என்னைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க வந்தான். அதை தடுக்க முயற்சித்தேன். அப்போது கையில் பலத்த காயமேற்பட்டது. அவர்கள் கையில் பாட்டில் வைத்திருந்தனர். அது ஆசிட்டாக இருந்திருக்கலாம். அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டதால், அவர்கள் தப்பிவிட்டனர்’’ என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து ஆறுதல் கூறி னார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.