EPS ஆதரவாளர் மீது தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட ஹாஸ்பிட்டலுக்கு போகாமல் என்ன செய்தார் தெரியுமா?
அதிமுக அலுவலகத்தில் தாக்கப்பட்ட முன்னாள் பகுதி செயலாளர் பெரம்பூர் மாரிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கூட செல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் தாக்கப்பட்ட முன்னாள் பகுதி செயலாளர் பெரம்பூர் மாரிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கூட செல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை என போட்ட குண்டு அதிமுகவில் சூறாவளி போல் சுழன்று அடித்து வருகிறது. இந்நிலையில், வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதற்காக தலைமை அலுவலகம் வந்த ஜெயக்குமார்க்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று முழக்கம் எழுப்பினர். அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இபிஎஸ்க்கு ஆதரவாக வந்திருந்த அதிமுக நிர்வாகி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். "நீ என்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளரான" என்று கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர்.
இதில் வாய் மற்றும் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வடிந்தது. இதனால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தாக்கப்பட்ட முன்னாள் பகுதி செயலாளர் பெரம்பூர் மாரிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கூட செல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று முறையிட்டதாக கூறப்படுகிறது.