இந்தியாவில் அராஜக வழியில் தொடர்ந்து அரசியல் நிகழ்த்தி வரும் பாஜக இப்பொழுது ஒரு முதலமைச்சரையே தாக்க முற்பபட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வளர்ச்சியை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளது என்றும் அதனால்தான் அவரது வீட்டை பாஜக ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தமிழக ஆம்ஆத்மி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை "ஜூதி படம்" (பொய் சொல்லும் படம்) என்று விமர்சித்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே போலீஸ் முன்னிலையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் (பாஜக) தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படதிற்கு எதிரா கூறிய திரு.கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிராக பாஜக வினர் கெஜ்ரிவால் வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.

டெல்லி சட்டப் பேரவையில் பேசிய கெஜ்ரிவால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை "ஜூதி படம்" (பொய் சொல்லும்) என்று கூறியிருந்தார். அந்த படத்திற்கு பாஜக, மோடி தரும் தேவையற்ற முக்கியத்துவம் குறித்து விமர்சித்திருந்தார். இதை ஏற்று கொள்ள முடியாத பஜாகவினர் ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காமல் ரௌடிகளை ஏவி முதல்வர் வீட்டை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். டெல்லி மாநில துணை முதல்வர் திரு.மணீஷ் சிசோடியா அவர்கள் கூறும் போது இந்த சமூக விரோத கும்பல் கெஜ்ரிவால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தினர். மேலும், முதல்வர் வீட்டுக்கு வெளியே இருந்த பாதுகாப்புச் சுவரையும் உடைத்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது என்றார்.

இந்தியாவில் அராஜக வழியில் தொடர்ந்து அரசியல் நிகழ்த்தி வரும் பாஜக இப்பொழுது ஒரு முதலமைச்சரையே தாக்க முற்பபட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் தொடர் வெற்றிகளை (பஞ்சாப்) பொறுத்து கொள்ள முடியாத பாஜகவினர் தற்பொழுது அராஜக அரசியலை கையில் எடுத்துள்ளனர். இவர்களின் இந்த போக்கிற்கு இந்திய மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை தருவார்கள். கெஜ்ரிவால் வீடு பாஜக ரௌடிகளால் தாக்கப்பட்டதற்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக பாஜகவினர்க்கும் அதன் பரிவரங்களுக்கும் பிரதமர் திரு.மோடிக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
