Asianet News TamilAsianet News Tamil

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. அடுத்த நான்கு நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது மழை.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  11.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம்  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்,  கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

Atmospheric overlay cycle. For the next four days the heavy rain in tamilnadu.
Author
Chennai, First Published May 11, 2021, 2:16 PM IST

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம்  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்,  கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

Atmospheric overlay cycle. For the next four days the heavy rain in tamilnadu.

12.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 13.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

Atmospheric overlay cycle. For the next four days the heavy rain in tamilnadu.

14.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் . கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.15.05.2021: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்.  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக  மாலை முதல் காலை வரை வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். 

Atmospheric overlay cycle. For the next four days the heavy rain in tamilnadu.

வெப்பநிலை முன்னறிவிப்பு: 11.05.2021, 12.05.2021 : தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2  முதல் 3  டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity)50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன்  காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். 

Atmospheric overlay cycle. For the next four days the heavy rain in tamilnadu.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  தெற்கு அரபிக்கடல் பகுதியில் 5.8 கிலோமீட்டர் வரை நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக 11-05-2021, 12-05-2021: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.13-05-2021: தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.வரும் 14-05-2021 அன்று தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு  மற்றும் மாலத்தீவு பகுதியில் புதிய  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக14-05-2021,15.05.2021: தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள்  இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறியுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios