Athum MLA Feeling About Earn Money from Party

ஜெயலலிதா இருந்த வரையில் அ.தி.மு.க.வினர் யாருக்கும் வாய் திறக்க அனுமதியில்லை. கஷ்டமோ, நஷ்டமோ, அவதூறோ, விமர்சனமோ எதுவாகிலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டபடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பெயர் இருக்கும், ஆனால் பதவி இருக்காது! ஆள் இருப்பார் ஆனால் அதிகாரம் இருக்காது!

ஜெ., மறைவுக்குப் பின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு வாய் திறக்க எந்த தங்கு தடையுமில்லை. ஆனால் அதை சிலர் ஓவர் தத்துப்பித்துத் தனமாக பயன்படுத்துவதால் ‘அம்மா உங்க வாய்க்கெல்லாம் பூட்டு போட்டு வெச்சது சரிதான்யா!’ என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. 

அக்கட்சி வி.ஐ.பி.க்களே அம்மாஞ்சித்தனமாகவும், வில்லங்கமாகவும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், சிலரோ மிக அழகாகவும், ஆச்சரியப்படும் படியும் பேசி வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சின்னத்தம்பி...

“அம்மா அவர்கள் சுய உதவிக்குழுக்களை பெண்களுக்காக உருவாக்கினார். இதில் இணைந்த தமிழக பெண்கள் பலர் பல்வேறு சலுகைகளை பெற்றனர். ஆண்களுக்கும் அம்மா அப்படிப்பட்ட சுய உதவிக்குழுக்களை கொண்டு வந்தார். ஆனால் நான் உட்பட பலரும் அம்மாவின் பேச்சை கேட்டு நடக்காமல், அந்த குழுக்களில் சேராமல் இருந்து விட்டோம். இருந்திருந்தா கையில நாலு காசு புலங்கியிருக்கும். ஏதாச்சும் தொழிலை பண்ணி சம்பாதிச்சு காசு சேர்த்து ஊருக்குள்ளே பன்னாட்டா திரிஞ்சிருக்கலாம். 
ஆனால் பெண்களின் சுய உதவிக் குழுக்களோ அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பொருளாதார அளவில் பெரும் முன்னேற்றத்தில் உள்ளனர். 

ஹூம் நம்மால் பொறாமை மட்டுமே படமுடியுது.” என்று டச்சிங்காக பேசியிருக்கிறார். இதை மக்களும் வெகுவாய் ரசித்திருக்கின்றனர்.

ப்பார்றா! இம்புட்டு நாளா எங்கேய்யா இருந்தீங்க சின்னத்தம்பி!