அத்திவரதரை இதுவரை சுமார் 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனையடுத்து, 17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார். 

இந்நிலையில், இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின்னர், அவர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றார். இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிராக போராடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

 

மேலும், இதுவரை அத்திவரதை சுமார் 1 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர் முதல்வர் கூறியுள்ளார். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதை போல் நீர் மிகை மாநிலமாக விரைவில் உருவாகும். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் 16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.