Asianet News TamilAsianet News Tamil

ஆத்திகர்களும் நாத்திகர்களும் சேர்ந்தது தான் திராவிட மாடல் ஆட்சி.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி..

முதலமைச்சரை பொறுத்தவரை ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் பிரிவினை பார்ப்பதில்லை எனவும் எல்லாரும் சமம் தான் எனவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர் என்றும் அவர்  கூறியுள்ளார்.

Atheist and Spiritual people belong to the Dravidian model of Regime - Minister Sekar Babu
Author
Tamilnádu, First Published May 29, 2022, 3:13 PM IST

முதலமைச்சரை பொறுத்தவரை ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் பிரிவினை பார்ப்பதில்லை எனவும் எல்லாரும் சமம் தான் எனவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒரு சேர உருவாக்கிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர் என்றும் அவர்  கூறியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தொண்டர் சீர்புராணம் தெய்வச் சேக்கிழார் விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,” இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழக முதல்வரை பொருத்தவரையில்,ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்ற பிரிவினை இல்லை என்று கூறினார்.

மேலும் ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லாதவர். முதல்வருக்கு எல்லோரும் சமம் என்று கூறிய அமைச்சர் இந்துசமய அறநிலையத்துறைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் பொற்காலம் என்று வரலாற்றில் பதியப்படுகின்ற அளவிற்கு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்

மேலும் படிக்க: .PMK 2.0 : இனிதான் பார்க்கப்போறீங்க அன்புமணி ஆட்டத்த.. பாமக 2.0 பிளான் ரெடி.!
 
Follow Us:
Download App:
  • android
  • ios