உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கோப்பை மற்றும் மேன் ஆப் தி மேட் யார் எனக் கணித்துக் கூறிய டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜிஹாசன் கூறியது பலித்து இருக்கிறது. ஆனால் கனிமொழி விஷயத்தில் ஒரு கணிப்பு தலைகீழாகி பொய்த்திருக்கிறது. 

உதயநிதி ஸ்டாலிஉன் அரசியலுக்கு வரமாட்டார். அடுத்த செயல் தலைவர் நீங்கள் தான் என ஜோதிடர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆனால், இப்போது அது பொய்யாகி இருக்கிறது. அந்தப்பதிவில், ’’திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் திமுக தலைவராக திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டதாக திமுகவின் பொது செயலாளர் க.அன்பழகன் குறிப்பிட்ட நேரம் காலை 10 மணி 41  நிமிடம். பூரட்டாதி நட்சத்திரம், சுகர்மம் யோகம், பலவாம் கரணம், துவிதியை திதி எமகண்டம் முடிந்து பதவி ஏற்றார். மு.க.ஸ்டாலின் அவரது நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்த  ஜாதகம்.

ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவராக பதவி ஏற்ற நேரத்தையும் அவரது சொந்த ஜாதகத்தையும் வைத்து கணிதத்தில் எனக்கு கிடைத்த பலன்களை கூறுகிறேன். மு.க.ஸ்டாலின் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இரு நடைமுறை வரலாற்றின் உண்மைகளை பார்ப்போம்.

மெரினாவில் சமாதி கிடைத்த தலைவர்களின் வாரிசுகள் இதுவரை முதல்வர் ஆனது இல்லை. இந்தியாவில் இதுவரை துணை முதல்வராக இருந்தவர்கள் யாரும் மீண்டும் முதல்வர் ஆனது இல்லை. இனி நமது கணிப்பை காண்போம். மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நேரம் நல்ல நேரமே. இனி வரும் காலத்தில் அவர் தனிப்பட்டு இயங்க மாட்டார். திமுகவின் ஆளுமை மிக்க தலைவராக இருப்பார். இனி வரும் காலங்களில் இவர் மிக நிதானமாக பேசுவார். (பேச்சு தடுமாறாது. குறிப்பாக பழமொழி பேசமாட்டார்.) 

அவரது ஜாதக படி முதல்வர் ஆக வாய்ப்பு இல்லை. ஆனால் கூட்டு தொழிலில் யாரேனும் ஒருவர் ஜாதகப்படி மற்றொருவர் லாபம் அடைவது போல கூட்டணி தலைவர்களின்  ஜாதகத்தை வைத்தே தேர்தல் நேரத்தில் கணிக்க முடியும். எப்படி மனைவி ஜாதக படி அவரது கணவர் தொழில் லாபம் அடைகிறாரோ அது போல தேர்தல் நேரத்தில் கணிக்க இயலும்.

மு.க.ஸ்டாலினின் அரசியல் இனி டி.டி.வி.தினகரனை எதிர்த்தே இருக்கும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ், ஆகியோர் ஒரு பொருட்டாக இருக்க மாட்டார்கள். கட்சி சட்ட திட்டங்களை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பார். கட்சியில் தவறு செய்வோர்  எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்பார். இதனால் கட்சியில் கட்டுப்பாடு மிகுந்திருக்கும்.

இனி வரும் காலத்தில் தொண்டர்களின் குரலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். எமகண்டம் முடிந்து பதவி ஏற்றதால் இனி இவரது போக்கு மிக எளிமையாக இருக்கும் தனது அப்பாவை போல அனைவரும் எளிதில் பார்க்கும் வண்ணம் நடைமுறையை மாற்றுவார். அதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்.

முதற்கட்டமாக இவர் மிக விரைவில் ஊர் ஊராக சென்று கட்சியினரையும். பொதுமக்களையும் சந்திப்பார். கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கும் பழைய நபர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்வார். புதிதாக இளைஞர்களையும் கட்சியில் சேர்ப்பார்.
நடிகர்களின் வரவால் பிரிந்து சென்ற கட்சியின் உறுப்பினர் பொறுப்பாளர்களை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களை கழகத்தில் இணைக்க திட்டம் தீட்டி அதற்கான நடவடிக்கையை எடுப்பார்.

மிக விரைவில் நமக்கு நாமே நிகழ்ச்சியை மீண்டும் புது வடிவத்தில் செயல்படுத்துவார். இனி இந்துக்களுக்கு எதிரான கொள்கைகளை சற்று தளர்த்தி கடுமையான வார்த்தையை எவரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வார். (அதாவது இனி விநாயகர் சதுர்த்தி தீபாவளி பண்டிகை களுக்கு விடுமுறை தின வாழ்த்துக்கள் இல்லாமல் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பார்)

இரண்டாம் கட்ட தலைவர்களையும் பார்ப்பன எதிர்ப்பு அரசியலோ இந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் திணிக்கப்படுவது குறித்து,  ஊடக விவாத மேடை நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மாட்டார். முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் மேலும் தீவிரமாக ஈடுபடுவார். நேரடியாக தனது பங்களிப்பை அளிப்பார். பிறரிடமிருந்து சற்று ஒதுங்கியிருப்பவர் என்கிற பெயர் அவருக்கு உண்டு. இது விரைவில் மாறும். தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் தலைவராக உருவெடுப்பார். மத்திய அரசுடன் அணுசரித்து அரசியல் செய்வார். கூட்டணி தலைவர்களிடம், கருணாநிதி போல சிறப்பாக தகுந்த மரியாதையை கொடுத்து அன்போடு பழகுவார் மேலும் அவரது அன்பை நீண்ட காலம் தக்க வைப்பார்.

ஸ்டாலின் சகோதரியான  திருதி. கனிமொழி, தி.மு.க. சார்பாக தேசிய அரசியலில் ஈடுபடுவார். ஸ்டாலின் அவர்கள் ஜாதகப்படி  2024ம் ஆண்டு காலகட்டத்தில் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அக்காலகட்டத்தில் அவரது சகோதரி கனிமொழி சிலகாலம் செயல் தலைவராக இருப்பார். 2030 – 2031 இல் திமுக அடுத்த தலைவருக்கான தேர்தல் நடக்கும்.

மு.க.அழகிரியின் தாக்கம் மிக பெரிய அளவில் இருக்கும். வரும் ஐந்தாம் தேதி,  திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்காக மு.க. அழகிரி நடத்த இருக்கும்  மௌன அஞ்சலி ஊர்வலம் பிரம்மாண்டமாக நடக்கும். ஆனால், மு.க.அழகிரி தி.மு.க.வை சேதப்படுத்தவோ அல்லது உடைக்கவோ மாட்டார். மிக விரைவில் அழகிரியை, கட்சிக்குள் சேர்ப்பார் ஸ்டாலின். அவருக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பார். மீண்டும் தென் மாவட்டங்களில் அழகிரி கோலோச்சுவார். அழகிரியின் மகன், தயாநிதி அழகிரியும் முழு நேர அரசியலில் ஈடுபடுவார். அதே நேரத்தில் ஸ்டாலின் மகனும் நடிகரும் ஆன உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார்’’ என தெரிவித்து இருந்தார். 

உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என பாலாஜி ஹாசன் தெரிவித்ததை அறிந்த கனிமொழி அவரைக் கூப்பிட்டு பாராட்டி, கவனித்த புகைப்படங்கள் வெளியானது. ஆனால், பாலாஜி ஹாசனின் கணிப்பு பொய் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கனிமொழி உணர்ந்து கொண்டுள்ளார். உதயநிதி கட்சிக்கு வந்து விட்டார். இளைஞரணி செயலாளராகி ஸ்டாலினையே ஓரம் கட்டும் அளவுக்கு முழுவீச்சில் களப்பணியாற்றி வருகிறார். இதனால், ஸாடாலினுக்கு அடுத்து கனிமொழி தான் என ட்ரெண்டிங் ஜோதிடர் பாலாஜி டுபாக்கூர் விட்டது தெரிய வந்துள்ளது.