Asianet News TamilAsianet News Tamil

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கோடிகளை குவிக்கும் இயக்குநர்களின் உதவியாளர்கள்..!

எல்லாதுறைகளிலும், அரசு அலுவலர்கள் மாற்றலாவதை போல இந்த உதவியாளர்களையும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் அரசு அலுவலர்களிடையே எழுந்துள்ளது. 

Assistants of directors who sit in one place and accumulate crores
Author
Tamil Nadu, First Published Jul 17, 2021, 6:34 PM IST

ஆட்சிகூட ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாறுகிறது. அமைச்சர்களின் இலாகாவே அவ்வப்போது மாற்றத்திற்கு உண்டாகிறது. சிலநேரங்களில் பதவி பறிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் மாற்றலாகி செல்வது வாடிக்கையாகவே இருக்கிறது. ஆனால், இவர்கள் மட்டும் மாற்றலாகாமல் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியில் இருந்து காரியம் சாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. Assistants of directors who sit in one place and accumulate crores

பள்ளிக்கல்வித்துறை,  மின்சாரவாரியம், சுகாதரத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலை துறை, உயர்கல்வித்துறை என ஒவ்வொரு துறைக்கும் இயக்குநர்களோ, கமிஷனர்களோ பொறுப்பு வகித்து வருகின்றனர். இவர்களின் பொறுப்பு துறை ரீதியாக முக்கியமானதும், முடிவெடுக்க வேண்டியதுமானது. அரசு பதவிகளில் உயர்ந்த பதவி. அவ்வப்போது துறை இயக்குநர்கள், கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். ஆனால், அவர்களது உதவியாளர்கள் மட்டும் பல ஆண்டுகளாக மாற்றலாகாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருவகிறார்கள். இயக்குநர்கள் மாறினாலும் துறை ரீதியான அனைத்து தகவல்களும் இவர்களுக்கு அத்துபடி என்பதால் இவர்கள் காட்டில் மழைதான்’’எனக் குற்றசாட்டு எழுந்துள்ளது.

 Assistants of directors who sit in one place and accumulate crores

இயக்குநர்களையோ, கமிஷனர்களையோ பார்க்க வருபவர்களை அனுமதிப்புதும், நிராகரிப்பதும் இவர்களது விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது.  அப்படி பார்க்க வருபவர்களிடம் அந்த காரியத்தின் வீரியப்படி இவர்கள் கலெக்சனை அள்ளிக் குவிப்பதாக கூறப்படுகிறது. அரசு சம்பளம் போக இப்படி சம்பாதிக்கும் ஒரு சில துறைகளின் இயக்குநர்களின் உதயவியாளர்கள் கோடி கோடியாய் சொத்து சேர்த்துள்ளனர். டாஸ்மாக் இயக்குநரின் உதவியாளரெல்லாம் பல கோடிகளை சேர்த்து வைத்துள்ளார்’’என்கிறார்கள். 

எல்லாதுறைகளிலும், அரசு அலுவலர்கள் மாற்றலாவதை போல இந்த உதவியாளர்களையும் மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் அரசு அலுவலர்களிடையே எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios