Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் ஏட்டின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்... நடுரோட்டில் நடந்த அராஜகம்..!

டிராபிக் போலீஸ் ஏட்டின் கன்னத்தில் அறைந்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

Assistant to the Minister slapped on the cheek by a police officer
Author
Tamil Nadu, First Published Oct 20, 2021, 12:17 PM IST

டிராபிக் போலீஸ் ஏட்டின் கன்னத்தில் அறைந்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்களின் உதவியாளர்களின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், திருச்செந்தூர் போக்குவரத்து தலைமைக் காவலரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா என்பவர் கன்னத்தில் அறைந்ததாக காவலர் புகார் தெரிவித்துள்ளார். Assistant to the Minister slapped on the cheek by a police officer

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவாயில் முன்புள்ள 4 முக்கு சாலைப்பகுதியில் முத்துக்குமார் என்ற போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தார்.

அவர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்தபோது, மீனவர் நலத்துறை மற்றும் கால் நடைகள் பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரன் வாகனம் போக்குவரத்து இடையூறாக இருந்துள்ளது.

இதனால் போக்குவரத்து போலீசார் முத்துக்குமார், அங்கு சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர் கிருபாகரன் கார் ஓட்டுனரிடம் அங்கிருந்து நகரும் படி  தெரிவித்துள்ளார். ஓட்டுநர் அந்த வாகனத்தை நகர்த்த முடியாது என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Assistant to the Minister slapped on the cheek by a police officer

இதனையடுத்து ஹோட்டலில் இருந்த கிருபாகரனிடம் ஓட்டுனர் சென்று, டிராபிக் போலீஸ் வாகனத்தை நகர்த்த சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹோட்டலில் இருந்து வந்த கிருபாகரன் டிராபிக் போலீஸ் முத்துக்குமாரிடம் வாகனத்தை ஏன் நகர்த்த சொன்னாய் என்று கூறி போலீசாரை தரக்குறைவாக பேசி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios