Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்..! காஷ்மீர் மாநிலத்தில் நிறுத்தி வைப்பு..!

தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

Assembly polls in AP Arunachal Odisha and Sikkim
Author
India, First Published Mar 10, 2019, 7:04 PM IST

தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.Assembly polls in AP Arunachal Odisha and Sikkim

 ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும், 2 -ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ல் 13 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகளுக்கும் நடத்தப்பட உள்ளது.  3 -ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும்,  ஏப்ரல்- 29ம் தேதி 4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள  71 தொகுதிகள்  தேர்தல் நடத்தப்படும்.Assembly polls in AP Arunachal Odisha and Sikkim

நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி பதவிக்காலம் முடிய உள்ள சிக்கிம் மாநிலத்தில் மே 27-ந் தேதியும், ஆந்திரா மாநிலத்தில் ஜூன் 18-ம் தேதியும், ஒடிசாவில் ஜூன் 11-ம் தேதியும், அருணாசலபிரதேசம் ஜூன் 1-ம் தேதி சட்டசபை தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios