தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியை பார்வையிட்ட தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன்பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- செம்மஞ்சேரி பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. ராட்சத பைப்புகள் அமைத்து உடனடியாக தண்ணீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த பகுதியை சூழ்ந்துள்ள மழைநீர் எப்பொழுது வடியும் என்பது கேள்விக்குறிதான். இன்று வரை அதிமுக கூட்டனியில்தான் தேமுதிக உள்ளது. தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு ஜனவரியில் நடைபெற்ற பிறகு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.