வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணியுடன் போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா? அல்லது 3வது அணி அமைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்;- ஜனவரி மாதத்தில் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி யாருடன் தேர்தல் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். வருகிற தேர்தல் தமிழகத்தின் முக்கியமான தேர்தல். தே.மு.தி.க. தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான்; மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறியுள்ளார்.
பின்னர், தேமுதிக சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், விவசாயிகள் பிரச்சனையில் தீர்வுகாண மத்திய அரசு குழு அமைக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை உடனே குறைக்க வேண்டுமென மத்திய அரசை தேமுதிக வலியுறுத்துகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 14, 2020, 4:01 PM IST