Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

assembly election... Distribution of Optional Petition in Congress Party from 25th February
Author
Tamil Nadu, First Published Feb 19, 2021, 10:33 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுக, அதிமுக தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இது தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் 234 தொகுதிகளுக்கும் விண்ணப்பம் பெறலாம் என்று அறிவித்துள்ளது.

assembly election... Distribution of Optional Petition in Congress Party from 25th February

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்;- 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.

assembly election... Distribution of Optional Petition in Congress Party from 25th February

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ. 5000 மும், தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ. 2500 ம் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

assembly election... Distribution of Optional Petition in Congress Party from 25th February

கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்து, இதர விபரங்களை விருப்பமனுவுடன் சேர்த்து  நன்கொடை தொகையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios