Asianet News TamilAsianet News Tamil

தலைநகரில் அதிமுகவை வாஷ்அவுட் செய்த ஸ்டாலின்... திமுக வெற்றிக்கு கைகொடுத்த 9 மாவட்டங்கள் இதுதான்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 

assembly election...9 districts that helped DMK win
Author
Tamil Nadu, First Published May 3, 2021, 2:05 PM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பெறுவாரியான வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியை தவிர மற்ற 6 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

assembly election...9 districts that helped DMK win

அதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் என 4 தொகுதிகளையும் திமுக வெற்றி பெற்றி பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் திமுகவே வென்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி(தனி) ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

assembly election...9 districts that helped DMK win

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிகளை தற்போது திமுக வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் என 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு திமுக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் என 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

assembly election...9 districts that helped DMK win

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில்  ஆர்.கே.நகர், ராயபுரம், விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகளை தவிர மற்ற 11 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios