Asianet today news bits
மாலை கடந்து முன் இரவுக்குள் நுழைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்! இதமான சூட்டுடன் வெஜ் க்ளியர் சூப்பை உறிஞ்சியவாறு, கொண்டக்கடலை சுண்டலுடன், சில விறுவிறு செய்திகள் உங்கள் ஏஸியாநெட் தமிழ் இணையதளத்தில் இருந்து...
* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை.
- தமிழக அரசு
.gif)
* பொது நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பு தொடர்பாக தமிழக அரசு விதித்துள்ள 55 கட்டளைகளில் வெறும் ஐந்து கட்டளைகளையாவது அவர்கள் மதித்தால் கூட இந்த அரசை நாங்கள் மன்னிக்கிறோம்.
- இணையதள தி.மு.க.
* சபரிமலைக்கு வரும் புல்மேடு வழியே வரும் பக்தர்கள் பாண்டித்தாவளம் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறிந்து செயல்படுங்கள். அதிக நேரம் காட்டில் இருக்காதீர்கள், புல்மேட்டில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை.
- சபரிமலை தேவசம்போர்டு.
* அரசுக்கு எதிராக பேசினால் என் தாய் மற்றும் மதம் பற்றி பேசுகின்றனர். நிஜவாழ்க்கையிலும் என்னை வில்லனாகவே பார்க்கின்றனர்.
- நடிகர் பிரகாஷ் ராஜ்.
.png)
* பிரகாஷ்ராஜை மரியாதை குறைவாய் விமர்சிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்யவில்லை. திரைப்படங்களில் வாய்ப்பு குறைவாக உள்ளதால் சர்ச்சையாக பேசுகிறார் பிரகாஷ்.
- மைசூரு பா.ஜ. எம்.பி. பிரதாப் சிம்ஹா.
* செயலற்று கிடக்கும் நிர்வாக சீர்கேட்டால் அடிப்படை தேவைகளை கூட பெற முடியாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். ஜனநாயக முறையில் இந்த அரசை அகற்றி, ஆட்சி மாற்றம் காண வியூகம் வகுப்போம்!
- தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்.
.jpg)
* தமிழகத்தில் வேறு எந்த கட்சியுடனும் பா.ஜ.க.வால் கூட்டணி வைக்க முடியாது. அ.தி.மு.க. மட்டுமே அதற்கு விதி, விதிவிலக்கு. இதனாலேயே இரட்டை இலையை அந்த அணிக்கு ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
* கட்சியை உடைத்துவிடலாம், ஆட்சியை பிடித்துவிடலாம் என சிலர் நினைத்தனர். அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பது போல் தேர்தல் கமிஷன் தீர்ப்பு வந்துள்ளது.
- அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
* பா.ஜ.க. ஆட்சியில் கல்விக்கடன் மறுக்கப்படுகிறது. அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால் முதல் தலைமுறை பட்டதாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
- மாஜி நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
.jpg)
* எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்று இன்றைய ஹீரோக்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்களை தவறாக சித்தரிப்பது வேதனையளிக்கிறது.
- இயக்குநர் சீனு ராமசாமி.
