தமிழ்நாட்டின் மேற்கு  மண்டல மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் ஆதரவு  குறித்த அலசல் ஆய்வில் வெளியான ரிசல்ட்டில் வெளியானது. தற்போது மத்திய  மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் பார்ப்போம்.

புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது மத்திய மண்டலம்.

மத்திய மண்டலம்:

தமிழகத்தின்  மத்திய மண்டலமான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வன்னியர், முத்தரையர், முக்குலத்தோர், தலித் ஆகிய சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

மத்திய மண்டலம் காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதால், பாசனத்திற்கான காவிரி நீர் மற்றும் குடிநீர் ஆகியவை இப்பகுதி மக்களின் பிரதான பிரச்னைகளாக உள்ளன.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என 20 சதவிகிதம் பேரும் கர்நாடகாவிடமிருந்து உரிய காவிரி நீரை விவசாயத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என 10 சதவிகிதம் பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, லஞ்சம் மற்றும் ஊழல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றையும் மத்திய மாவட்ட மக்கள், தங்களது பிரச்னைகளாக குறிப்பிட்டுள்ளனர்.

“சிதறும் வாக்குகள் “”

முத்தரையர் சமூக மக்களில் 29 சதவிகித்தினரின் ஆதரவு அதிமுகவிற்கும் 28 சதவிகிதத்தினரின் ஆதரவு திமுகவிற்க்கும் உள்ளது. ரஜினிக்கு 8 சதவிகிதம் மற்றும் கமல்ஹாசனுக்கு 7 சதவிகிதம் முத்தரையர் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வன்னியர் சமூகத்தினரின் வாக்குப்பதிவை மேற்கு மண்டலத்தில் பார்த்துவிட்டோம். முக்குலத்தோர் சமூகத்தினர் மத்திய மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பெருவாரியாக இருப்பதால், அவர்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து தென் மண்டலங்கள் குறித்த அலசலில் பார்ப்போம்.

ஒட்டுமொத்தமாக மத்திய மாவட்டங்களை பொறுத்தமட்டில் திமுக அதிகபட்சமாக 36 சதவிகிதம் ஆதரவை பெற்றுள்ளது. அதிமுக 21 சதவிகிதம் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது. ரஜினிகாந்த் 12 சதவிகிதம் ஆதரவை பெற்றுள்ளார். ரஜினிக்கு கிடைத்துள்ள ஆதரவில் 6ல் ஒரு பங்குதான் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக மத்திய மண்டலத்தில் திமுகவின் ஆதிக்கம் அதிகம் அதிகமாகவே இருப்பதை அலசி எடுத்த ரிபோர்ட்டின் இந்த ரிசல்ட் சொல்கிறது.