எடப்பாடி எச்சரித்ததை போலவே.. நீட் தேர்வு தொடர்பான ரிட் மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டது தமிழக அரசு.

நீட் தேர்வு தொடர்பாக தனது ரிட் மனு  மீதான விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

As warned by Edappadi.. Tamil Nadu government request to postpone the hearing on the writ petition related to NEET examination.

நீட் தேர்வு தொடர்பாக தனது ரிட் மனு  மீதான விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ளதால் வழக்கை 12 வார காலத்திற்கு ஒத்திவைக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடி வருகிறது இதுவரை நீட் தேர்வால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர்  எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேநேரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கையிலும் தமிழகம் ஈடுபட்டுவருகிறது. நீட்  தேர்வை கட்டாயமாக்கிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது.

As warned by Edappadi.. Tamil Nadu government request to postpone the hearing on the writ petition related to NEET examination.

ஆனால் அந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் புறக்கணித்தது. அதில் நீட் தேர்வின் பாதகங்கள் குறித்து ஆதாரபூர்வ தகவல்கள் இல்லை என புறக்கணித்தது. அதனையடுத்து அந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை புள்ளி விவரத்துடன் தமிழக அரசு ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா விசாரணைக்கு உகந்தது என ஏற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: யுவர் பிளாட்ஃபார்ம் குழுவினருக்கு முதல்வர் வாழ்த்து..!

இந்நிலையில் அந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அந்த ரிட் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ளதால் வழக்கை 12 வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இது அரசியல் களத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

As warned by Edappadi.. Tamil Nadu government request to postpone the hearing on the writ petition related to NEET examination.

இதுகுறித்து நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு எப்போது விளக்கு பெற போகிறீர்கள் முதல்வர் அவர்களே என கேள்வி எழுப்பியதுடன்,  நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக அரசால் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

அதிகரிக்கும் இளம் குற்றவாளிகள்..! அலார்ட் ஆன கோவை போலீஸ்..! இளைஞர்களை கவர புதிய திட்டம் அறிமுகம்

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த வழக்கை நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இந்நிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ள அந்த ரிட்மனு மீதான வழக்கை ஒத்திவைக்க தமிழக அரசு வாய்தா கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

As warned by Edappadi.. Tamil Nadu government request to postpone the hearing on the writ petition related to NEET examination.

எனவே, நாளைய வாய்தா கேட்காமல் அந்த வழக்கை மூத்த வழக்கறிஞர்களை கொண்டு எதிர்கொள்ளவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்ற தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நேற்று எடப்பாடி பழனிச்சாமி கணித்தது போலவே தமிழக அரசு நீட் தேர்வு ரிட் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios