அந்தக் கருத்தையே தற்போது திருமாவளவனும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாஜகவை விட்டு அதிமுக வெளியேறுமா? என்பது கேள்விக்குறியே..!

 பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கும் வரை அ.தி.மு.க.விற்கு சரிவுதான் தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’ஆணவக் கொலைகளை தூண்டக்கூடிய செய்யக்கூடிய பாஜக,பாமக போன்ற சக்திகள் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

ஆர்எஸ்எஸ் பாஜக விரித்த வலையில் சிக்கிக்கொண்ட பாமக தொடர்ந்து தலித்துக்களுக்கு எதிராக சாதி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும். பாமகவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் மத அரசியலை முன்னெடுப்பது போல, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சார அரசியலை முன்னெடுப்பது போல, ராமதாஸ் தமிழகத்தில் தலித் விரோத அரசியலையும், தலித் வெறுப்பு அரசியலையும் முன்னெடுத்து வருகிறார். மொத்தத்தில் பாஜகவும், பாமகவும் ஒன்றுதான்.

இதையும் படியுங்கள்:- இந்தியாவில் அந்த வசதிகள் இல்லையாம்... துபாயில் குடியேறியே நடிகர் மாதவன்..!

ஆட்டு மந்தையைப் போல் இருப்பவர்கள்தான் தலித் கிறிஸ்தவர்கள். ஆபத்தான தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைத்து கட்சிகளும் அறிமுக நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

 உணவகங்களில், திருமண நிகழ்வுகளில் என ஒவ்வொரு நாளும் வீணாகும் -விரயமாகும் உணவு எவ்வளவு என்பதை, பட்டினி கிடந்து நாவறண்டு குடல் சுருண்டு ஒரு மழலையின் சாவு நடந்திருப்பது பெரும் தலைகுனிவு. தேர்தல் சீர்திருத்த மசோதா வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க வழி செய்கிறது'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:- ராஜேந்திர பாலாஜி இருந்தால் என்ன.. யாராக இருந்தாலும்.. தப்பிக்க முடியாது.. அமைச்சர் மூர்த்தி அதிரடி

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஓரிரு தினங்களுக்கு முன் விமர்சித்து இருந்தார். அதிமுகவில் இருந்த முன்னாள் எம்.பி., அன்வர் ராஜாவும் கட்சியில் இருக்கும்போதே ’அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் எனக்கூறி வந்தார். அவரைப்போலவே அதிமுகவில் உள்ள பலரது கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:- திமுக வெற்றிக்கு மனுஷன் எப்படி உழைத்தார் தெரியுமா? உதயநிதி அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை..!

பாஜக தமிழகத்தில் காலூன்ற பல போராட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. திமுகவுக்கும் தாங்களுக்கும் போட்டி தான் என பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். இப்போது பாஜக தமிழகத்தில் எதிர்கட்சி போல செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிமுகவை கூட ஏற்றுக் கொள்வோம் பாஜக தமிழகத்திற்குள் வளர்ந்து விடக்கூடாது என மற்ற கட்சிகள் கருத்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். அந்தக் கருத்தையே தற்போது திருமாவளவனும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாஜகவை விட்டு அதிமுக வெளியேறுமா? என்பது கேள்விக்குறியே..!