Arun Jaitly Budget for 2108-2019 today parliment

பாஜக ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2018 -19 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்கிறார்.

அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட்டில் என்ன சலுகை இடம் பெறவுள்ளது. வருமான வரி எந்தளவிற்கு இருக்கப் போகிறது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் பட்ஜெட்டில் இம்முறை வலுவான அரசியல் ரீதியிலான கண்ணோட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த மக்களவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, விவசாயிகளையும் ஏழைகளையும் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வணிகர்கள் ஜி.எஸ்.டி.யால் கடும் அவதிப்பட்டனர். எனவே விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 9-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் அடுத்த பகுதி மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் தொடர்பான அலுவல்களைத் தவிர, பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அவற்றில் முத்தலாக் தடைச்சட்ட மசோதாவும் ஒன்றாகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 5 ஆவது பட்ஜெட் இது.