முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்  

பாஜக . மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கா சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் டயாலிசிஸ் செய்து வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் அமைச்சர் பதவியையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் நிலையைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அருண் ஜெட்லிக்கு திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அருண் ஜெட்லியிடம் நலம் விசாரிப்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போன்றோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.