முருகப்பெருமானின் ஆசியால், 50 வருடமாக ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண துவங்கியிருக்கிறது என அகில இந்திய இளைஞரணி துணை செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’ஈ.வெ.ரா படத்தை வைத்தவர்கள், வேறொரு படத்தை வைக்கிறார்கள். எல்லாம், 18 ல் விழுந்த அடி. சமூக வலைத்தளத்தில், திமுக நிர்வாகிகளின் மாற்றங்கள். அடுத்தது கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முருகப்பெருமான் காட்சி அளிப்பார். விழுகிற அடி அப்படி. மொட்டையடித்து, பாதயாத்திரையாக வந்து முருக பக்தர்கள் காலில் விழுந்தாலும், கருங்காலிகளை யாரும் மறந்தோ மன்னித்தோ விடாதீர்கள். தமிழனுக்கு பிரச்சனையே மறதி தான். தமிழகத்திற்கு விடிவு, எம்பெருமான் முருகன் தான். ஆன்மீக தமிழகத்தை மீட்டெடுப்போம்.

முருக பக்தர்கள் எல்லா கருங்காலிகளையும் துவம்சம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு முடிவுரை எழுதும் வரை, மன்னிப்பே கிடையாது. அடுத்த திரைக்கதைக்கு தயாராகும் திருடர்கள். நாங்கள் இந்து விரோதிகள் இல்லை என்று, நெற்றியில் திருநீறு குங்குமத்துடன் தமிழினத் துரோகிகள் ஒவ்வொரு நபர்களாக பேட்டி கொடுப்பார்கள் பாருங்கள். ஒரு கோடிக்கு மேல் எங்கள் கட்சியில் இந்துக்கள் உள்ளனர். அதில் எத்தனை பேர் வெட்கம், மானம்,சூடு, சொரணையோடு உள்ளனர்..? 50 வருஷமா ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண துவங்கியிருக்கிறது.

ஆறடி மண்ணுக்கு, அழுத கூட்டம் தானே. ஆறுமுகன் அதிரடி ஆட்டம் அரங்கேறும், நாள் தோறும். அறிவாலய அலறல் தினந்தோறும்’’என்று அவர் தெரிவித்தார்.