ஏண்டா பா 40 வருஷம் கழ்சிச்சி அத்திவரதர் மேல வரதால நல்லது நடக்கும்னு சொல்லிட்டு திரிஞ்சவனுங்கள யாராச்சும் பார்த்தீங்க...? சுப.வீரபாண்டியன் தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

 

இறைமறுப்பு கொள்கையாளரான சுப.வீ கிறிஸ்தவ- இஸ்லாமிய மதக்கடவுளை பற்றி இப்படி விமர்சிக்க முடியுமா? செட்டியார் இனத்தை சேர்ந்த சுப.வீ முதலில் தன்குடும்பத்தை சேர்ந்தவர்களையும், தனது அண்ணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்யும் இந்துமத சடங்குகள், பூஜைகளை நிறுத்தச் சொல்ல முடியுமா? அவரால் முடியாது. அப்படிப்பட்டவர் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். இனிமேல் தேவையில்லாமல் இந்து மதத்தை இழுத்தால் சும்மா இருக்க முடியாது என தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து சுப.வீக்குக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

இது என்னவென்று ஆராய்ந்தபோது பத்திரிக்கையாளர் ஒருவர், காட்டசாட்டமாக , ‘’அத்திவரதரை இழுவுபடுத்த சுப.வீக்கு எந்த உரிமையும் கிடையாது. ஓசி சோற்றுக்கு அலையும் இவர், கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக கருதப்படும் வாடிகனிலும், இங்கிலாந்து அரசர் உயிருக்கு போராட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்து அந்தக் கடவுள் எங்கே போனார் எனக் கேட்க வேண்டியது தானே?

ஈரானும், சவுதி அரேபியாவிலும் கொரோனா தொற்று சீரழித்து வருகிறதே..? அவர்கள் மதக் கடவுள்களை இந்த சுப.வீ கேள்வி கேட்பாரா? அப்படி இருக்கையில் இந்து மதக் கடவுளை மட்டும் கேள்வி கேட்பதா..? என ஆவேசமாக வீடியோ பதிவு செய்து கொந்தளித்துள்ளார். 

இது ஒருபுறமிருக்க, கோவை, சேலம், நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்துக்கள் பலரும் பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்களும் தைரியமாக கோபாதாபத்துடன் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். குறிப்பாக சாதி, மதம் பாராமல் கொரோனாவால் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ள நிலையில், இப்படியொரு பேச்சு தேவையா? என தங்களது ஆதங்கத்தை முன் வைத்து வருகிறார்கள். சுப.வீ., கி.வீரமணி உள்ளிட்ட திமுக ஆதரவாளர்கள் இப்படி பேசுவது திமுகவுக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 

’’தேவையில்லாமல் சுய லாபத்துக்காக  வீட்டில் சும்மா இருக்காமல் அரிப்பெடுத்துப்போய் எதைஎதையோ உளறிக் கொட்டினால் இனி அனுமதிக்க மாட்டோம். சுப.வீயின் நடவடிக்கை கண்ணாடி கூடுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவது போல இருக்கிறது. தேவையில்லாமல் வரம்பு மீறினால் சேதாரம் அவருக்கு நிச்சயம்’’ என பெரும்பாலான இந்துக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.