'பிரதமர் நரேந்திர மோடி, எப்போதும், அதிரடி முடிவுகள் எடுப்பவர்' என பிஜேபி தலைவர்கள் எப்போதுமே சொல்வார்கள். பிஜேபிக்காரர்கள் மட்டுமே சொல்லிவந்த இந்த கெத்தான விஷயத்தை,  வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு மூத்த அதிகாரி, மோடியை பற்றி சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நரேந்திர மோடி பிரதமரான பின், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசும் வாய்ப்பு, அந்த அதிகாரிக்கு கிடைத்தது. அப்போது, 'இதுவரை இந்திய பிரதமராக இருந்தவர்களுக்கும், மோடிக்கும் வித்தியாசம் உள்ளது. மோடி மற்ற பிரதமரை போல இல்லை மோடியை சாதாரணமாக நினைக்க வேண்டாம்  மோடியிடம், பாகிஸ்தான், கவனமாக இருக்க வேண்டும் என அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்தாராம்.

தான் பதவியில் இருந்தபோது, மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அந்த அதிகாரி தெரிவித்தார். ஒரு விவகாரத்தில், நீங்கள் சொல்வதை செய்வது கஷ்டம், அதை, இப்படித்தான் செய்ய வேண்டும் எனச் சொல்லி, அது தொடர்பான சில ஆவணங்களைக் காட்டி, சட்ட திட்டத்தை சொன்னாராம் அந்த அதிகாரி.

அதற்கு பதிலளித்த மோடி, அந்த ஆவணங்களை நீங்களே படித்துக் கொண்டிருங்கள். ஆனால், எனக்கு தேவை, இந்த விஷயம் தான், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள் எனக் கூறி, அந்த அதிகாரியை அனுப்பி விட்டாராம். பொதுவாக எந்த ஒரு திட்டமோ அல்லது பிரச்சனைக்கு முடிவுகட்ட சொன்னால், ஏதாவது சட்டங்களை கூறி, அதை செய்ய விடாமல், அதிகாரிகள் தடுப்பது வழக்கம் எனக் கூறிய அந்த மூத்த அதிகாரி, பிரதமர் மோடியிடம், அது எடுபடாது என, உறுதியாக கூறினார்.