மைனஸ் 40 டிகிரி வெப்பநிலையில் கூட எதிரிகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட டி-90 மற்றும் டி-72 ரக டாங்கர்களை இந்திய ராணுவம், இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே நிறுத்தியுள்ளது. டெம்சோக் பகுதியில் சுமார் 14,500 அடி உயரத்தில் இந்த டாங்கர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் குளிர்காலத்தில் இரவு வெப்பநிலை மைனஸ் 35 டிகிரியாக குறைகிறது எனவும், ஆனாலும் அந்த தட்ப வெப்பத்திலும் இந்த ரக டாங்கர்கள் சிறப்பாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்கும் மேலாக லடாக்கில் பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய ராணுவம் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. முப்படைகளும் உஷார் நிலையில் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்ட குளிர் காலத்தில் கூட ராணுவத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு  பகுதிக்கு அருகே கவச படைப்பிரிவின் டி-90 மற்றும் டி-72 ரக டாங்கர்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த டாங்கர்களை பொருத்தவரையில் உலகின் மிக உயரமான போர்க்கள தளவாடமாக அவைகள் கருதப்படுகின்றன. இந்த  டாங்கர்களின் சிறப்பு என்னவென்றால், மைனஸ் டிகிரி குளிரிலும் அது இயங்கும் என்பதே ஆகும். 

14 கார்ப்பஸ் தலைமை அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில், குளிர்காலத்தை பொருத்தவரை அதிலும் படையை முன்னோக்கி கொண்டு செல்லும் அளவிற்கு முழுமையாக நாம் தயாராக இருக்கிறோம். எங்களிடம் அதிக கலோரி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரேஷன் பொருட்கள் உள்ளன. அதே போல் ஏராளமான எரிபொருட்கள் மட்டும் எண்ணெய் உள்ளிட்டவையும் உள்ளன. குளிர்கால உடைகள், வெப்ப பரிமாற்ற உபகரணங்களும் தேவையான அளவுக்கு உள்ளன. ஒரு குளிர் காலத்தில் போருக்கான ஏற்பாடுகள் நீண்டகாலமாக செய்யப்பட்டு வருகின்றன. ஜவான்கள் மற்றும் ஆயுதங்களை கையாள ராணுவத்திற்கு போதுமான வழிமுறைகள் உள்ளன. குளிர்காலத்தில்  டாங்கர்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக காரியம், அதேபோல் துப்பாக்கிகள் மற்றும் போர் வாகனங்களை பராமரிப்பது இந்த பகுதியில் பெரும் சவாலாக உள்ளது. பயர் அண்ட்  ப்யூரி கார்ப்பஸ் என்பது இந்திய ராணுவத்தின் ஒரே குழுவாகும், உலக அளவில் இந்தியாவிடம் மட்டுமே இந்த குழு உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் படையை முன்னோக்கி கொண்டு செல்லும் அளவிற்கு இந்த குழு செயல்படக்கூடியது ஆகும். அதே போல் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை இங்கு பராமரிப்பதற்கும், தயாரிப்பதற்கும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

கவச ரெஜிமென்ட் என்பது எந்த ஒரு வானிலை மற்றும் நிலப்பரப்பிலும் போர் செய்யக்கூடிய திறன் பெற்றதாகும். இந்நிலையில் டாங்கரில் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், இப்பிரிவு இயந்திர மயமாக்கப்பட்ட காலாட்படை இராணுவத்தின் மேம்பட்ட பகுதி என கூறியுள்ளார். எந்த ஒரு வானிலை மற்றும் நிலப்பரப்பிலும் சண்டையிடும் அனுபவம் இந்தப் படைப்பிரிவிற்கு உண்டு. ஏவுகணை சேமிப்பு மற்றும் அதிக இயக்க வெடிமருந்துகள் போன்ற அம்சங்கள் காரணமாக நீண்டகால போர்த்திறன் கொண்ட படைப் பிரிவாக இது உள்ளது. அதேபோல் காலாட்படையில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் எந்த ஊரு ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் கவச ரெஜிமென்ட் குறுகிய காலத்தில் எல்லைப் பகுதிகளை பாதுகாத்துள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் 29,30 ஆகிய தேதிகளில் சீனா தனது டாங்கர்களை பயன்படுத்தி இந்திய பகுதிகளை பிடிக்க முயற்சித்தலபோது இந்திய துருப்புகள் சீன ஊடுருவலை முறியடித்தனர். அதுமட்டுமின்றி  பைகாங்கின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியமான சிகரங்களை படைப்பிரிவு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.