Asianet News TamilAsianet News Tamil

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கிறீர்களா..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 

Are you waiting for the cooperative jewelry loan waiver..? Important announcement issued by the Minister..!
Author
Madurai, First Published Jun 9, 2021, 9:14 PM IST

மதுரையில் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்களுக்குக் கொரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு போன்றவற்றை தடையின்றி விரைவாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்குவதற்கு ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.Are you waiting for the cooperative jewelry loan waiver..? Important announcement issued by the Minister..!
தமிழகத்தில் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். என்றாலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் விளை பொருட்கள் சேதமடைவது பற்றி தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்படும்.

Are you waiting for the cooperative jewelry loan waiver..? Important announcement issued by the Minister..!
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்குத் தள்ளுபடி கொடுத்துள்ளதாக ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளனது. அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் கூட்டுறவுப் பணிகளில் சேர நேர்காணல் முடிந்தவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படும். பின்னர் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.” என்று ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios