ரஜினி தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு ஒய்வெடுக்க சென்ற புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அவர் இ-பாஸ் எடுத்துச் சென்றாரா என்பது குறித்து ஆராயப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகராத்தை திமுகவினர்  பெரிதுபடுத்தினர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பாஸ் எடுக்காமல் போலீஸ் ஸ்டேஷனில் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை சாத்தான்குளம் சென்று சந்தித்து ஆறுதல் சொன்னார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுக்காமல் சென்றதாக பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் #இபாஸ்_எங்க_உதய் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.     

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர், ‘மாஞ்சோலை படுகொலை குறித்து நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் போது, சில மாங்காய்கள் ரஜினியின் இ-பாஸ் பேசி திசை திருப்புகின்றன. ரஜினி பற்றி பேசுவது பெரிய காமெடி. #இபாஸ்_எங்க_உதய் என கேள்வி எழுப்புகின்றனர்.