Asianet News TamilAsianet News Tamil

பழைய கார் வைத்திருப்பவரா நீங்கள்... மத்திய அரசு கொடுக்கும் கடும் அதிர்ச்சி..!

தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 300 அபராதம் செலுத்த வேண்டும். கார்களுக்கான அபராதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
 

Are you an old car owner ... the shock given by the central government ..!
Author
Delhi, First Published Mar 22, 2021, 11:32 AM IST

இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. புதிய கட்டணம் அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 15 ஆண்டுகள் பழைய காரை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். 15 ஆண்டுகள் பழைய இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1000 பதிவு கட்டணம் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கான கட்டணம் முறையே ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆகும். Are you an old car owner ... the shock given by the central government ..!

பதிவு சான்றிதழை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டால், அபராதம் வசூலிக்கப்படும். தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 300 அபராதம் செலுத்த வேண்டும். கார்களுக்கான அபராதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.Are you an old car owner ... the shock given by the central government ..!

15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல், பதிவு மட்டுமின்றி வாகனங்களின் தகுதி சான்று (FC) பெறுவதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. கார்களுக்கான கட்டணம் ரூ. 800 முதல் ரூ. 1000 ஆகும். Are you an old car owner ... the shock given by the central government ..!

தகுதி சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1000, கார்களுக்கு ரூ. 7500 ஆகும். புதிய கட்டண முறைக்கான அறிவிப்பு, கடந்த வாரம் தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மக்களவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியாகி இருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios