தமிழக தலைமைச் செயலாளர் எங்கள் ஒரு மக்கள் பிரதிநிதி என்று கூட பார்க்காமல் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போன்று தரக்குறைவாக நடத்தினார்.அவரது அறையில் தொலைக்காட்சி பெட்டியில் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தியது போல் நடந்து கொண்டார் தலைமைச் செயலாளர் சண்முகம். 


இது குறித்து,தலைமை செயலாளர் தங்களை தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய தயாநிதிமாறன், "மூன்றாம் தர மக்களாக, வாயில் சொல்ல முடியாத,அதாவது தாழ்த்தப்பட்ட ஆட்களை போல நடத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் அதை கவனிக்காமல் அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார் என்று பேசினார்.


இவர் தாழ்த்தப்பட்ட ஆட்களை போன்று என்று பேசிய வார்த்தையை அதிமுகவினர் சுற்றி சுற்றி அடித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் வீரமணி போன்றவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை இப்படி இழிவாக பேசிய தயாநிதிமாறன் மீது என் கோபமும் கொள்ளாமல் அமைதி காப்பது அவர்களின் பண கஜானா வாயை அடைக்க வைக்கிறதா? என்றெல்லாம் உசுப்பேற்றி வருகிறார்கள்.
அதன் பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன்.., ' தலைமைச் செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி.ஆனால் அந்த வேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா' என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல் என அடக்கி அடங்கி வாசித்திருக்கிறார் திருமா.


இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள அதிமுகவினர் .." விசிக திமுகவின் அடிமை என்பதை நிருபித்திருக்கிறது.திமுகவினரின் கஜானா தான் திருமா கண் முன்னே தெரிகிறது. அதனால் தான் இப்படி அடக்கி வாசித்திருகிறார் என்று கொம்பு சீவிவிட்டிருக்கிறார்கள். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.