தமிழகத்தை 3 ஆண்டுகளில் கிறிஸ்துவ மாநிலமாக மாற்றுவது மிகவும் எளிது என மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசியுள்ளது தற்போது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. 

தமிழர்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவது குறித்து மத போதகர் பேசுகையில் பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் உள்ளதாகவும், அதில் 60 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த 2020ம் ஆண்டில் ஒரு உறுப்பினர் (உறுப்பினர்களை அவர் விசுவாசி எனக்குறிப்பிடுகிறார்) ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், 2021ம் ஆண்டில் 1.20 கோடி மக்களும் அதற்கடுத்த ஆண்டு, அதற்கும் அடுத்த ஆண்டு என 2023ம் ஆண்டுக்குள் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளார்.

தமிழகத்தின் பெரிய நடிகர்களின் பெயர்கள் மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த காணொலி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குறிவைத்து மதமாற்றத்தில் ஈடுபட கூடாது என சட்டம் இருந்தும் மோகன் லாசரஸ் ஏன் இப்படி பேசினார்..? நாடார் சமூகத்தை சேர்ந்த லாசரஸ் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்களை மதம் மாற்றி விட்டார். சொந்த சமூகத்தை தவிர பிள்ளைமார், யாதவர், உடையார், தலித்துகள் ஆகிய சமூகத்தை குறிவைத்து தான் களத்தில் இறங்கியுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அவர் மீது அனுதாபம்தான் ஏற்படும் என அவர் நம்புவதாக கூறுகிறார்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், ஊழியம் செய்ததால் மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அவர் கூறினால் முக்கிய எதிர்க்கட்சியில் தொடங்கி அனைவரும் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிப்பார்கள் என்றும் அவர் நம்புவதாக சொல்லப்படுகிறது.