ஓ.பி.எஸும்- ஈ.பி.எஸும் பப்ளிசிட்டி பைத்தியங்களா..? நயினாரை தொடர்ந்து அதிமுகவை கதறடிக்கும் பழைய குஷ்பு வீடியோ.!

பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டு மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. அதிமுக தயவால்தான் பாஜகவினர் 4 பேரும் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றார்கள் என்பது நாட்டுக்கே தெரியும்

Are OPS and EPS Publicity Crazy? Khushboo video that makes ADMK tremble following Nainar!

அதிமுக எம்.எல்.ஏ.,களுக்கு ஆண்மை இருக்கிறதா..? எனக் கேட்டு அதிர வைத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ.,வான நயினார் நாகேந்திரன். இது அதிமுகவினரை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. இது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து. அதுவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதற்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என நழுவினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 

ஆனாலும் தான் சொன்ன கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக சமாளித்து வருகிறார் நயினார். ஏற்கெனவே அதிமுகவில் இருந்தபோது அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஆனால் ஜெயலலிதாவால் அப்போது விலக்கி வைக்கப்பட்டார். 

இங்கிருந்து பாஜகவுக்கு சென்றவர் அதிமுகவை பற்றி எப்படி விமர்சிக்கலாம் என பொங்கி வருகின்றனர் அதிமுகவினர். இந்நிலையில், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழித்தேவன், ‘’சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் அதிமுகவினர் யாரும் ஆண்மையோடு பேசவில்லை என அதிமுகவை குறை சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அடுத்தது பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்ற நகைச்சுவையையும் அவர் கூறியிருக்கிறார்.Are OPS and EPS Publicity Crazy? Khushboo video that makes ADMK tremble following Nainar!

அண்ணாமலை, எடப்பாடியிடம் பேசி விட்டேன். வருத்தம் தெரிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் பேசும்போது அந்த மேடையிலேயே அருகில் இருந்து ரசித்துக் கேட்டவர் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை. பேசும்போது அந்த இடத்தில் ரசித்து கேட்டு விட்டு மறுநாள் காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. அதிமுக தயவால்தான் பாஜகவினர் 4 பேரும் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றார்கள் என்பது நாட்டுக்கே தெரியும்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார். Are OPS and EPS Publicity Crazy? Khushboo video that makes ADMK tremble following Nainar!

இது ஒருபுறமிருக்க, குஷ்பு ஏற்கெனவே ஓ.பி.எஸ்- ஈ.பிஎஸ் குறித்து பேசிய வீடியோ க்ளிப்பிங்க்ஸ் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ’’மோடி அவர்களை, ஓ.பி.எஸும். ஈபிஎஸும் பார்க்க செல்வது பப்ளிசிட்டி பைத்தியம் என்றே புரிந்து கொள்ளத் தெரிகிறது’’ என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தபோது பேசிய வீடியோ எனத் தெரிய வந்துள்ளது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios