Asianet News TamilAsianet News Tamil

திருமணங்கள் கூடுதலானோர் கலந்துகொள்ள அனுமதியா? விளக்கம் அளித்த தமிழக அரசு..!

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

Are more people allowed to attend weddings? tamilnadu government
Author
Tamil Nadu, First Published Jul 31, 2020, 1:07 PM IST

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

Are more people allowed to attend weddings? tamilnadu government

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதில், மேலும் சில தளர்வுகளும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Are more people allowed to attend weddings? tamilnadu government

இந்நிலையில், திருமணங்களில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், திருமணங்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். தனிமனித இடைவெளி அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பாஸ் பெற்றுவிட்டு தான் செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios