Asianet News TamilAsianet News Tamil

 தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமா..! தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பிரபல நடிகர் கண்டனம்...!

aravindsamy opposition to government neet exam centre
aravindsamy opposition to government neet exam centre
Author
First Published Oct 25, 2017, 9:11 PM IST


தமிழக அரசு தொடங்க உள்ள நீட் பயிற்சி மையங்களுக்கு நடிகர் அரவிந்த்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

aravindsamy opposition to government neet exam centre

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 100 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு மேல் 412 மையங்களாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நீட் பயிற்சி மையங்கள் தொடங்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்ததற்கு நடிகர் அரவிந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios