வாக்களிக்க மக்களுக்கு உரிமை உள்ளதுபோல் சட்டசபை நிகழ்ச்சிகளையும் நேரடியாக பார்க்க உரிமை உண்டு …அரவிந்தசாமி ஆவேசம்…

தமிக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், அதை மக்கள் பார்த்து தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நடிகர் அரவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வன்முறை நடைபெற்றதாக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகின.

இதில் திமுக , அதிமுக என இரு தரப்பினரும் பங்கேற்ற நிலையில் ஆளம் கட்சித் தரப்பு சட்டசபையில் நடைப்பெற்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் எடிட் செய்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்தசாமி வாக்களிக்க மக்களுக்கு உரிமை உள்ளதுபோல் சட்டசபை நிகழ்ச்சிகளையும் நேரடியாக பார்க்க உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

சட்டசபை நடக்கும் நிகழ்ச்சிகளை எந்த வித எடிட்டிங்கும் இல்லாமல் நேரலையில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் அரவிந்தவாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.