Asianet News TamilAsianet News Tamil

பாய்ந்தது கமல் மீது வழக்கு...! தமிழக அரசு வைத்த அதிரடி ஆப்பு ....!

நாதுராம் கோட்சே முதல் இந்து தீவிரவாதி என கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலஹாசன் பேசியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

Aravakurichy police complaint filed case against kamal haassan
Author
Chennai, First Published May 14, 2019, 7:46 PM IST

அரவக்குறிச்சி மாவட்டம் பள்ளப்பட்டி தமிழ்நகரைச் சேர்ந்த வள்ளிநாயகத்தின் மகன் கேவி ராமகிருஷ்ணன் என்பவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கமலுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்களே... "நான் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன். பள்ளப்பட்டி ரங்கராஜ் நகரில் பேக்கரி தொழிலும் செய்து வருகிறேன். மேலும் கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். 

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு 8 .30  மணி அளவில் பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் என்பவர் வாகனப் பிரச்சாரம், செய்து கொண்டிருந்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தேவையில்லாமல் பேசினார். அந்த இடத்தில் இருந்த இந்துக்களிடம் அவர்களின் உள் உணர்வில் ஒருவித பதற்றம், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதி முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக உள்ளது. அங்கு அவர்களது ஓட்டு அதிகமாக இருப்பதால் மேற்படி கமல்ஹாசன் பேசியுள்ளார்.

Aravakurichy police complaint filed case against kamal haassan

கமல்ஹாசன் பேசியது:

இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த இந்துக்களை பற்றி அவதூராகவும் இந்துக்களை தீவிரவாதி என்றும் சித்தரித்து பேசினார். கமல் இவ்வாறு பேசியுள்ளது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்தும் மற்றும் விரோதப்போக்கை தூண்டும் விதமாக அமையும் என்றும் அந்த மனுவில் ராமகிருஷ்ணன் என்பவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Aravakurichy police complaint filed case against kamal haassan

எனவே மத நல்லிணக்கத்திற்கு எதிராக விரோதப் போக்கை உருவாக்கும் வகையில் கமல் பேசி இருப்பதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் ராமகிருஷ்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Aravakurichy police complaint filed case against kamal haassan

கடந்த 12ம் தேதி தாக்கல் செய்த இந்த மனுவின் மீதான விசாரணை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று வந்தது. அதில், NO :154/19, U/S-153,295 A IPC இன் படி வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aravakurichy police complaint filed case against kamal haassan

மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர் அரவக்குறிச்சி காவல் இடத்திற்கு சென்று கையெழுத்திடும் நிலை உருவாகியுள்ளது. மேலும், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கமலுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் மீது தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது மக்கள் நீதி மையம் கட்சியினர் மற்றும் அதனுடைய முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios