Asianet News TamilAsianet News Tamil

2ஜி விவகாரத்தில் எனது நியாயமான நடவடிக்கைகளை  பாதுகாக்காமல் மன்மோகன் சிங் அமைதியா இருந்தார் !  ஆ.ராசா வேதனை !!

.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh
.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh
Author
First Published Jan 19, 2018, 9:04 AM IST


2ஜி அலைக்ற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தபோது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மௌனமாக இருந்தார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வேதனை தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கிய  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்  அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்டுத்தியதாக எழுந்த  குற்றச்ட்டில் முகுற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய  அமைச்சர்  ஆ.ராசா உள்ளிட்ட  17 பேர் மீது சிபிஐவழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவரும் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh

இது தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நிதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டார் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி  அவர்கள் அனைவரையும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி  விடுதலை செய்தது உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆ.ராசா, தன் தரப்பு நியாயங்களை விளக்கி ‘2 ஜி சாகா அன்போல்ட்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியதாக தகவல்கள் வெளியாகின. அந்த புத்தகம்  நாளை வெளியிடப்படவுள்ளது.

அந்த புத்தகத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் 2 ஜி அலைக்கற்றைகளை புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான முழு செயல்முறையையும் விளக்கினேன். அதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அவரது ஒப்புதல் பெற்றேன்.

.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh

ஆனால் பிரதமருக்கு அவருடைய ஆலோசகர்கள் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வந்தனர். பிரதமர் அலுவலகத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு செல்வாக்கு இருந்தது என குறிப்பிட்டுள்ளார்..

எனது முழுமையான நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும் காட்டிய உணர்ச்சிமிகுந்த மவுனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மவுனம் ஆக்குவதுபோல அமைந்தது என வேதனையுடள் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார்..

.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு புகார்கள் தொடர்பாக தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திலும், சில தொலை தொடர்பு நிறுவன அலுவலகங்களிலும் சி.பி.ஐ. சோதனைகள் நடந்த பின்னர் 2009-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ந் தேதி மாலை சுமார் 7 மணியளவில் பிரதமரை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தேன். பிரதமர் அலுவலகத்தில் அப்போது முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் உடன் இருந்தார். சி.பி.ஐ. நடத்திய சோதனைகளைப் பற்றி நான் கூறியபோது பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

.A.Rasa Book about 2 G case. blame Man Mohan singh
2 ஜி ஊழல் குற்றச்சாட்டுகள், நாட்டின் நிர்வாக அமைப்பின் புனிதத்தன்மையின் மீதான வெட்கக்கேடான குற்றசாட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது அரசை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில் அதற்கான துப்பாக்கி, தலைமை கணக்கு தணிக்கையரான வினோத் ராயின் தோளில் வைக்கப்பட்டது என்பது எனது நம்பிக்கை என்றும் ஆ.ராசா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios