Appreciate Tamil language ... President speaks to Hindi speakers
இந்தி பேசும் மக்கள், நாட்டில் பேசப்படும் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் சமமான மதிப்பளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளில் இந்திக்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது என தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்தி மொழி பேசும் மக்கள் மற்ற மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மற்ற மொழிக்காரர்களிடம் பேசும்போது அந்த மொழியின் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடுவதை கருத்தில்கொண்டு இந்த கருத்தை குடியரசுத் தலைவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
